×

கொடைக்கானல் மலைச் சாலையில் வேன் கவிழ்ந்து 7 பேர் காயம்

பழநி, மே 8: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வெய்யலூர் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வேனில் கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு நேற்று மாலை பழநி வழியாக ஊருக்கு திரும்பிச்செல்ல முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள் வந்த வேன் மலைப்பாதையில் பழநி நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை வெய்யலூரை சேர்ந்த சந்திரமோகன்(44) என்பவர் ஓட்டினார்.

பழநி அருகே வட்டமலைப் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலை தடுப்பில் மோதி வேன்கவிழ்ந்தது. இதில் வேனின் பின்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும் வேனில் பயணித்த கோதண்டராமன் (56), ரேணுகா (45), காந்திமதி (50) உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த பழநி தீயணைப்பு துறையினர்மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொடைக்கானல் மலைச் சாலையில் வேன் கவிழ்ந்து 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Van ,Kodaikanal Hill Road ,Palani ,Veiyalur ,Chidambaram ,Cuddalore ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின்...